Descriptions:
மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய், விடியல் நாளாய், விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்ட போதிலும். அந்த விடியல்; உலகம் முழுக்க பரவ சுமார் 33 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. கடந்த 1889ஆம் ஆண்டுதான் முதல்முறையாக உலகம் முழுதும் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
1806ஆம் ஆண்டு தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த மிருகத்தனமான 18 மணி நேர வேலையை எதிர்த்து ஒலித்த குரல்கள் முதலாளி வர்க்கத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட போதும், முப்பது வருடங்களுக்கு பின் வீறு கொண்ட எரிமலையாய் தொழிலாளர்களின் உணர்வுகள் சீற்றம் கொண்டு முதலாளிகளின் மிருகத்தனமான வேலைவாங்கும் நடைமுறையை சுட்டு பொசுக்கியது. இதன் விளைவாய் அமெரிக்காவில் அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்களாயினர். இதனால் தொழிலாளர்களின் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது..வேகம் கொண்டது 1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது. 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வ 8 மணி நேர உறக்கம். உலகமே தொழிலாளர்களின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்து கொண்ட பின்பும், நமது பாரத தேசத்தில் 1927 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் நடைமுறைக்கு வந்தது. வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும், உலக முதலாளிகளின் வர்கத்திற்கு பறைசாற்றிய இன்னால், தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு பொன்நாள்.
இந்நன்னாளில், உலக தொழிலாளர்கள் அனைவரும், எல்ல வளமும், செல்வமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறது Tamil Gun Team